தடுப்பூசியை விட்டு எலுமிச்சை பழத்தை நாடும் சீனர்கள் - கொரோனாவை குணப்படுத்துமா ?
சீனாவில் கொரோனா பரவலுக்கு மத்தியில், எலுமிச்சை பழங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு செலுத்தப்பட்ட தடுப்பூசிகள் விரீயம் கொண்டதாக இல்லை என புலம்பும் உள்ளூர் மக்கள், எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள மக்காவ் பிராந்தியத்திற்கு செல்லும் சூழல் நிலவுகிறது. இதற்கிடையே இயற்கையாக எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள சீன மக்கள் ஆர்வம் காட்டுவதாகவும், இதில் எலுமிச்சை பழம் முக்கிய இடம் பிடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சீனாவில் எலுமிச்சை பழத்தின் தேவையும், விலையும் அதிகரித்து உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இஞ்சி, பூண்டு உள்ளிட்ட பொருட்களையும் அதிக நம்பும் சீனர்கள், மூலிகை மருந்துகளை தேடுவதில் அதிகம் நாட்டம் கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.