கடும் போக்குவரத்து நெரிசலால் ரிக்‌ஷாவில் பயணித்த மெர்சிடிஸ் இந்தியாவின் சிஇஓ

Update: 2022-10-02 02:05 GMT

மெர்சிடிஸ் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி போக்குவரத்து நெரிசலால் காரை விட்டு இறங்கி ரிக்‌ஷாவில் சென்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல சொகுசு வாகன நிறுவனமான மெர்சிடிஸ் இந்தியாவின் சி இ ஓ மார்ட்டின் ஷ்வெங்க், புனே சாலையில் தனது மெர்சிடிஸ் எஸ்-கிளாஸ் காரில் சென்று கொண்டிருந்த போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் காரில் இருந்து இறங்கி சிறிது தூரம் நடந்து சென்ற மார்ட்டின் தொடர்ந்து அங்கிருந்த ரிக்‌ஷா ஆட்டோவில் ஏறி பயணித்துள்ளார்... இது குறித்த பதிவை மார்ட்டின் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மெர்சிடிஸ் இந்தியாவுக்கே சி இ ஓவாக இருந்தாலும், அவருக்கு அவசரத்தில் உதவியது என்னவோ ஆட்டோ ரிக்‌ஷா தான் என்று இணையவாசிகள் ரிக்‌ஷாவைப் புகழ்ந்து வருகின்றனர்.https://youtu.be/LommzXAchvQ

Tags:    

மேலும் செய்திகள்