பாராட்டி பரிசு கொடுத்த மத்திய அரசு.. அப்படியே தூக்கி மக்களுக்கு தந்த கலெக்டர்.. சல்யூட் அடிக்க வைத்த செயல்..!

Update: 2023-01-25 07:48 GMT

கேரளாவில், மாவட்ட ஆட்சியரின் நிர்வாகத் திறனை பாராட்டி மத்திய அரசு வழங்கிய பரிசு தொகையை, மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கிய மாவட்ட ஆட்சியரின் செயலுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

இந்தியாவின் 29 மாநிலங்களைச் சேர்ந்த 404 மாவட்ட ஆட்சியர்களில் சிறப்பாக செயல்படும் 18 மாவட்ட ஆட்சியர்களை தேர்வு செய்து மத்திய அரசு விருதும், பரிசுத் தொகையும் வழங்கியுள்ளது.

இந்தப் பட்டியலில், கேரளா மாநிலம், பத்தணந்திட்டா மாவட்டத்தின் ஆட்சியர் திவ்யா இடம்பெற்றுள்ளார்.

அந்த வகையில், அவருக்கு பரிசுத் தொகையாக 1 லட்ச ரூபாய் வழங்கப்பட்டது.

இந்த பரிசு தொகையை, மாநில முதலமைச்சரின் நிவாரண நிதிக்காக மாவட்ட ஆட்சியர் திவ்யா வழங்கியுள்ளார்.

தனது குடும்பத்தினரோடு சென்று கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து பரிசுத் தொகைக்கான காசோலையை அவர் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்