உண்டியலில் காணாமல் போகும் பணம் சத்தமே இல்லாமல் சமையல்காரர் செய்த செயல் வெளியான சிசிடிவி காட்சிகள்
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கோயில் உண்டியலில் இருந்த பணத்தை திருடும் சமையல்காரரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
வடக்கு பெரியார் நகரில் உள்ள சீரடி சாய்பாபா கோயிலின் உண்டியலில் இருந்து சமீப காலமாக பணம் காணாமல் போய் உள்ளது.
இதனால், கோயில் நிர்வாகத்தினர் அங்கிருந்த சிசிடிவி காட்சியை ஆராய்ந்துள்ளனர்.
இதில், கோயிலில் சமையல்காரராக வேலை பார்த்து வந்த நபரே கைவரிசை காட்டி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ள நிலையில், பணத்தை திருடி கண்ணில் ஒத்திக்கொண்டு செல்லும் சமையல் காரர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.