தீரன் பட பாணியில் நடந்த கொடூர கொலைகள்... - ஒன்றரை வருடங்களாக நடந்த தேடுதல் வேட்டை

Update: 2022-09-16 02:41 GMT

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில்வே சாலையில் வசித்து வந்தவர் தன்ராஜ் சவுத்ரி. ராஜஸ்தானை சேர்ந்த இவர், சீர்காழியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நகை அடகு கடை மற்றும் நகைகளை விற்பனை செய்து வந்தார். இதனிடையே கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இவரின் வீட்டிற்குள் நுழைந்த கும்பல் தன்ராஜ் சவுத்ரியின் மனைவி ஆஷா, மகன் அகில் ஆகிய 2 பேரை கொடூரமாக கொலை செய்தது. பின்னர் வீட்டில் இருந்த 12.5 கிலோ தங்க நகைகள், 6 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தையும் அந்த கும்பல் கொள்ளையடித்துச் சென்றது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கொள்ளையர்களை பிடிக்க சென்றனர். அப்போது மஹிபால் சிங் என்பவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். வழக்கின் முதல் குற்றவாளியான மணிஷ் ராஜஸ்தானில் பதுங்கியிருப்பது தெரியவந்த நிலையில் அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை சீர்காழிக்கும் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்