ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க தாயுடன் சென்ற சிறுவன் - வாய்க்காலில் மூழ்கி உயிரிழந்த சோகம்
சீர்காழி அருகே ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க தாயுடன் சென்ற 2 வயது சிறுவன், வாய்க்காலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சீர்காழியை அடுத்த ஆச்சாள்புரம் - செங்கமேடு பகுதியை சேர்ந்த அமிர்தலிங்கத்தின் மனைவி ரஞ்சிதா, தனது குழந்தை அமரனுக்கு ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க, ராசான் வாய்க்கால் கரையில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்றார். ரஞ்சிதா ஆவணங்களை பூர்த்தி செய்து கொண்டிருந்தபோது, விளையாடிக் கொண்டிருந்த அமரன், எதிர்பாராத விதமாக வாய்க்காலில் தவறி விழுந்துள்ளான். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு அனுமந்தபுரம் பகுதியில் இருந்து சிறுவனின் உடலை மீட்டனர்.