13 நிமிடத்தில் 40 செய்திகள்... காலை தந்தி செய்திகள் | Thanthi Morning News | Speed News|(21.03.2023)
- தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பட்ஜெட்டில் விவசாயிகள் நலன் சார்ந்த முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கப்படும் என தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. தகுதியுள்ள மகளிருக்கு ரூ.1000 உரிமை தொகை வழங்க 7 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாகவும், விரைவில் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்குவதாக அறிவித்ததை, கரூரில் குலவை சத்தம் எழுப்பி பெண்கள் கொண்டாடினர். கரூரில் பெண்கள், ஊர்வலமாக சென்று அப்பகுதியில் உள்ள வீடுகள், கடைகளில் இருக்கும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
- அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வாழ்நாள் முழுக்க உதவி செய்யப் போகும் பல்வேறு நலத்திட்டங்கள் தமிழக பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவிதுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திராவிட மாடல் என்ற கருத்தியலுக்கு முழுமையான எடுத்துக்காட்டாக தமிழக பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
- குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் என கூறிவிட்டு தற்போது தகுதியை நிர்ணயிப்பதா என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக அரசின் பட்ஜெட் மின்மினிப்பூச்சி பட்ஜெட் என்று விமர்சித்துள்ள எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசின் பட்ஜெட்டால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை என கூறியுள்ளார்.
- பெண்களுக்கு செல்போன் வழங்குவதாக அறிவித்த அதிமுக, அதுபோல வழங்கியதா? என அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். மக்கள் மீது அக்கறை இருந்தால் எடப்பாடி பழனிசாமி முழு பட்ஜெட்டை கேட்டிருப்பார் என்றும், சிறப்பு திட்டங்களை கேட்க மனமின்றி ஈபிஎஸ் வெளிநடப்பு செய்ததாகவும் விமர்சித்துள்ளார்..