15 நிமிடத்தில் 42 செய்திகள்... மாலை தந்தி செய்திகள் (28.03.2023)

Update: 2023-03-28 12:49 GMT
  • வலுவான போராட்டத்திற்கு தயாராகுமாறு, பாஜக எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்...
  • நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற பாஜக நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பேசிய அவர், பாஜக எந்த அளவுக்கு வெற்றிகளை சுவைக்கிறதோ, அதே அளவுக்கு எதிர்க்கட்சிகளிடம் இருந்து தாக்குதலும் வரும் என குறிப்பிட்டார்.
  • ஆதாருடன், பான் கார்டு எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் ஜூன் 30ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது...
  • முன்னதாக மார்ச் 30 வரை காலக்கெடு வழங்கப்பட்டிருந்த நிலையில், மேலும் மூன்று மாதங்களுக்கு மத்திய அரசு அவகாசம் வழங்கியுள்ளது.
  • அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
  • அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்ததை தொடர்ந்து, ஈபிஎஸ் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டார்...
  • கட்சியின் புதிய உறுப்பினர் சேர்க்கை படிவம் ஏப்ரல் 5ம் தேதி முதல் வழங்கப்படும் என பொதுச்செயலாளராக முதல் அறிவிப்பையும் வெளியிட்டார்.
  • அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து தனி நீதிபதி அளித்த தீர்ப்பிற்கு
  • எதிராக ஓபிஎஸ் தரப்பு மேல் முறையீடு செய்துள்ளது...
  • அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக்கிடம் ஓபிஎஸ் தரப்பு முறையீடு செய்ததை தொடர்ந்து, நாளை வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.
  • பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கில் சாதகமான தீர்ப்பு வந்த பிறகு எம்.ஜி.ஆர் கெட்டப்பிற்கு ஈபிஎஸ்-ஐ மாற்றி தொண்டர்கள் மகிழ்ந்தனர்...
  • எம்ஜிஆர் அணிந்திருந்தது போன்று தொப்பி, கூலிங்கிளாஸை தொண்டர்கள் பரிசாக கொடுத்ததை அணிந்து ஈபிஎஸ் உற்சாகமடைந்தார்...

Tags:    

மேலும் செய்திகள்