தென்காசி அருகே நிகழ்ச்சி ஒன்றில் நுங்கு வண்டி ஓட்டிய - தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன்
காவல்துறையினர் கெடுபிடியாக நடந்துக்கொண்டதற்காக மன்னிப்பு கேட்பதாக நிகழ்ச்சி ஒன்றில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் வருந்தினார்.
தென்காசி அருகே சுரண்டையில் நாடார் வாலிபர் சங்க நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அவர், அங்கு காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த நுங்கு வண்டியை உருட்டி மகிழ்ந்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை, பணமதிப்பிழப்பு நடவடிக்கையை காமராஜரே பாராட்டியிருப்பார் என பிரதமர் கூறியதாக நினைவுக்கூர்ந்தார்.