மருத்துவமனைக்குள் புகுந்து டாக்டரின் ஸ்டெதஸ்கோப்பை திருடிய இளைஞர்கள் - பரபரப்பு சிசிடிவி காட்சிகள்
புதுச்சேரியில் ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து, மருத்துவ உபகரணங்களை திருடி சென்ற 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரி அரியாங்குப்பத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. அங்கு நள்ளிரவில் நண்பர்களுடன் வந்த நபர், காலில் ஏற்பட்ட காயத்திற்கு கட்டுப்போட்டுக்கொண்டுள்ளார். பின்னர் அவர்கள் திரும்பி செல்லுபோது, ஸ்டெத்தாஸ்கோப், பிபி பரிசோதிக்கும் கருவி, மருந்து அறையின் கொத்து சாவி ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் உதவியோடு விசாரணை நடத்திய போலீசார், திருட்டில் ஈடுபட்ட நால்வரையும் கைது செய்துள்ளனர்.