கணவனை இழந்த பெண்களுக்கு டார்கெட் - "பாலியல் தொழிலுக்கு வந்துதான் ஆகணும்.."யூடியூப் கும்பலின் புது மோசடி

Update: 2023-05-17 08:59 GMT

கணவனை இழந்த மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் கணவரை கொண்ட பெண்கள் யூடியூப் கும்பலால் பாலியல் தொழிலில் சிக்க வைக்கப்படுவதாக திருச்சி காவல் ஆணையர் அலுவகத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

திருச்சியை சேர்ந்த சித்ரா என்பவர் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இவர் கணவனை இழந்த பெண்கள் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் கணவரை கொண்ட பெண்களை நோட்டமிட்டு பாலியல் தொழிலில் சிக்க வைப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவிக்கும் பெண்கள் மீது காவல்நிலையத்தில் பொய் புகார்கள் கொடுத்து மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு தொடுக்கப்படும் பொய் புகாரால் சிலர் சிறை சென்று, இன்று வரை வழக்கை சந்தித்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக மதுரை, ஈரோடு மற்றும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த சிலர் திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்தனர். இதில், சித்ரா மீது பல பண மோசடி வழக்குகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், கடும் நடவடிக்கை எடுக்க கோரி புகாரில் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்