அரசு கேபிள் டிவி சேவைக்கு இடையூறு - தனியார் நிறுவன இயக்குனரிடம் தொடரும் விசாரணை | Arasu Cable TV
அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் இணைப்பை துண்டித்த விவகாரத்தில், 2ஆவது நாளாக விசாரணை நடைபெற்றது . தமிழகம் முழுவதும் கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ்களின் மென்பொருளை, ராஜன் என்பவருக்குச் சொந்தமான தனியார் நிறுவனம் நிர்வகித்து வருகிறது. அந்த நிறுவனம், அரசிடம் செய்து கொண்ட ஒப்பந்தப்படி வேலைகளை முடிக்க தாமதம் செய்ததால், 51 கோடி ரூபாய் நிலுவை வைக்கப்ப்டது. இது தொடர்பாக அரசுக்கு கடிதம் மூலம் நினைவூட்டிய ராஜன், பின்னர் மென்பொருள் மூலமாக சேவையில் இடையூறு ஏற்படுத்தியதால் கைது செய்யப்பட்டார். அவரிடம் 2 வது நாளாக சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் நேற்று விசாரணை மேற்கொண்டனர்.