நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசின் ரிட் மனு - உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

Update: 2022-10-14 02:42 GMT

நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசின் ரிட் மனு - உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்துக்கு எதிரான தமிழ்நாடு அரசின் ரிட் மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரணை செய்ய உள்ளது. மருத்துவப் படிப்பில் சேர நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்தால், கிராமப்புற மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு குற்றம் சாட்டி வருகிறது. இது தொடர்பான புள்ளி விவரங்களுடன், நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தக்குக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு ரிட் மனு தாக்கல் செய்தது. அதைத் தொடர்ந்து, அந்த ரிட் மனுவில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டடு மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி மற்றும் சி.டி. ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வர உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்