இன்று தமிழக பட்ஜெட் - எதிர்பார்ப்புகள் என்னென்ன?
இன்று தமிழக பட்ஜெட் - எதிர்பார்ப்புகள் என்னென்ன?
- இன்று தாக்கல் செய்யப்படும் தமிழக பட்ஜெட்டில், மகளிருக்கு உரிமை தொகை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 2023-24 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய உள்ளார்.
- அதில், பெண்களுக்கான உரிமைத் தொகையாக மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம், நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட விவரங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- அனைத்து அரசு பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி திட்டம் விரிவுபடுத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.
- பட்ஜெட்டில் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டுக்கு அதிக முக்கியத்துவம்,
- தகவல் தொழில்நுட்பத்துறையில் தொழில் பூங்காக்கள், ஐடி பார்க் அமைப்பது தொடர்பான அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது.
- கடந்த நிதி ஆண்டில் வருவாய் பற்றாக்குறை 7 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்திருந்த நிலையில், இந்த ஆண்டு இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
- தமிழக அரசுக்கு உள்ள கடன் அளவு, மேலும் வாங்க திட்டமிடப்பட்ட கடன் அளவு போன்ற அம்சங்கள் வெளியிடப்பட உள்ளது.