திடீரென மகளுடன் மாயமான தாய்... தேடி சென்ற கணவனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி - குடும்ப தகராறால் அரங்கேறிய விபரீதம்

Update: 2023-03-21 16:58 GMT

சூலூர் அருகே பரமசிவம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவருக்கு தனலட்சுமி என்பவருடன் திருமணமாகி, 16 வயதில் ஒரு மகள் இருந்த நிலையில், குடும்ப தகராறு காரணமாக தனலட்சுமி தன் மகளை அழைத்து கொண்டு வீட்டை விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதில், இருவரையும் சரவணன் தேடி வந்த நிலையில், சோமனூர் ரயில்வே தண்டாவளத்தில் இருவரும் பலத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருவரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்