புழல் சிறை கைதி திடீர் உயிரிழப்பு.. 4 நாட்களில் 2 பேர் மரணம்! - காரணம் என்ன..?
- சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி, உடல்நலக் குறைவால் உயிரிழந்த சம்பவம், சக கைதிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- சென்னை நந்தனத்தை சேர்ந்த கணேசன் என்பவர், பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த நவம்பர் மாதம் புழல் சிறையில் அழைக்கப்பட்டிருந்தார்.
- இந்த நிலையில், கணேசனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்த நிலையில், அவரை சிறைக்காவலர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
- ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
- புழல் சிறையில், கடந்த 4 நாட்களில் 2 கைதிகள் உயிரிழந்தது, சக கைதிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.