கனமழையால் இலங்கையில் வெள்ளப்பெருக்கு | பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
இலங்கையில் பெய்த கனமழையால் கண்டி மாவட்டத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், குறைந்த காற்றழுத்தமாக வலுவிழந்து, திரிகோணமலையில் கரையை கடந்தது. இதனால், பெய்த கனமழையால் கண்டி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கண்டி ரயில் நிலையத்தில் வெள்ள நீர் புகுந்தது. சாலைகளில் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. கனமழையால் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.