28 நிமிடத்தில் 58 செய்திகள்... காலை தந்தி செய்திகள் | Thanthi Morning News | Speed News (01.05.2023)

Update: 2023-05-01 04:29 GMT

சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 171 ரூபாய் குறைந்துள்ளது. இதன் மூலம் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் 2021 ரூபாய் 50 பைசாவுக்கு விற்பனையாகிறது. கடந்த மாதம் அதிரடியாக 351 ரூபாய் உயர்ந்த நிலையில் தற்போது 171 ரூபாய் குறைந்துள்ளது. வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை

திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 24 மாதங்களில் எந்த புதிய பணிகளும் நடைபெறவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேதனை தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் எந்த புதிய பணிகளும் நடைபெறவில்லை என்று குற்றம்சாட்டிய அவர், ஆங்காங்கே சிறிய சிறிய பணிகளை மட்டுமே செய்துள்ளதாக கூறினார். மேலும், போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் அ.தி.மு.க பெரிய கட்சி என்றாலும், தேசிய ஜனநாயக கூட்டணியின் முகமாக பிரதமர்தான் இருப்பதாக, பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழகம், புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி 40 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்றும், பிரதமர் 400 எம்.பி.க்களுடன் 3வது முறையாக ஆட்சியமைக்க வேண்டும் என்றும் அண்ணாமலை விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும், தேர்தலுக்கு இன்னும் நிறைய நாட்கள் உள்ளதால், யார் எங்கே நிற்பார்கள் என்ற பேச்சு இப்போதைக்கு அவசியமில்லை என்று கூறினார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து ஒருமையில் பேசுவதை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிறுத்திக் கொள்ள வேண்டும் என, பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி குறிப்பிட்டுள்ளார். இல்லையென்றால், பதிலுக்கு தாங்களும் பேசுவோம் என தனது ட்விட்டர் பக்கத்தில் எச்சரித்துள்ளாார்.

Tags:    

மேலும் செய்திகள்