- திருவாரூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மதுபோதையில் திமுக பிரமுகர் எழுத்தரைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- மாங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தென்னவராய நல்லூரைச் சேர்ந்த திமுக கிளைச் செயலாளரான செந்தில்குமார் பத்தாயிரம் ரூபாய்க்கு தனது தங்க நகைகளை அடகு வைத்துள்ளார். இதற்கான ரசீதை அவர் அப்போது வாங்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது
- . இதைத் தொடர்ந்து, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பணிபுரியும் ஊழியர்களை வெளியில் சந்தித்தால் ரசீது எங்கே என செந்தில்குமார் கேட்பதும், அதற்கு ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்தால் தருவதாக கூறுவதும் வாடிக்கையாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
- இந்நிலையில், அலுவலகத்திற்கு செந்தில் குமார் மதுபோதையில் சென்று, அங்கு தகாத வார்த்தைகளால் சங்க செயலாளர் செந்தில் மற்றும் எழுத்தர் கணேஷைத் திட்டியதாகக் கூறப்படுகிறது...
- அத்துடன், கணேஷை அவர் தாக்கியதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது...
- இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், செந்தில்குமார் ரகளையில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.