கேள்விகளால் துளைத்தெடுத்த விசாரணை குழு.. டாட்டா காட்டி சென்ற சித்த மருத்துவர் ஷர்மிகா

Update: 2023-01-24 10:35 GMT

சித்த மருத்துவம் குறித்து, யூடியூபில் தவறான ஆலோசனைகள் வழங்கியது தொடர்பான புகாரில், மருத்துவர் ஷர்மிகா, மருத்துவ கவுன்சிலிங் முன்பு நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.

சித்த மருத்துவர் ஷர்மிகா சமூக வலைதளங்களில் தவறான மருத்துவ ஆலோசனைகளை வழங்குவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக உடல் எடை, உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் மார்பக புற்றுநோய் குறித்து அவர் தெரிவித்த ஆலோசனைகள், சர்ச்சைக்குரிய வகையில் இருப்பதாக பலர் குற்றம் சாட்டினர். இந்த நிலையில், ஷர்மிகா வெளியிட்ட கருத்துகள் குறித்து விளக்கம் கேட்டு, இந்திய மருத்துவ இயக்குனரகம் மற்றும் ஓமியோபதி வாரியம் நோட்டீஸ் அனுப்பியது. அதன் பேரில், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவ கல்லூரி அலுவலகத்தில், ஷர்மிகா நேரில் ஆஜராகினார். இதனிடையே, இந்த விவகாரத்தில், ஃபிப்ரவரி 10ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக பதிலளிக்க ஷர்மிகாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்