திருநள்ளாறு சனீஸ்வரர் கோயில் அருகே நடக்கும் அதிர்ச்சி சம்பவம் - அதிகாரிகள் கடும் எச்சரிக்கை

Update: 2022-12-17 12:31 GMT

சனீஸ்வர பகவான் நளன் குளம் அருகில் விற்பனை செய்யப்பட்ட தரமற்ற உணவுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோயிலுக்கு வரும் பக்தர்கள் யாசகர்களுக்கு அன்னதானம் வழங்க நலன்குளத்தில் உள்ள வியாபாரிகளிடம் விலைக்கு உணவு வாங்குவது வழக்கம். இந்த உணவு தரமற்று இருப்பதாக புகார்கள் வந்த நிலையில், அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது கெட்டுப்போன உணவை பக்தர்களுக்கு வியாபாரிகள் விற்பனை செய்யும் நிலையில், அந்த உணவுகளை பக்தர்களிடம் இருந்து பெறும் வாசகர்கள், அதை உண்ணாமல் மீண்டும் வியாபாரிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு வாங்கிய இடத்திலேயே விற்பனை செய்கின்றனர். சுழற்சி முறையில் இந்த விற்பனை நடைபெறுவது கண்டறியப்பட்டது. கடந்த ஆண்டும் இதே போல் புகார்கள் வந்து, அதிகாரிகள் சோதனை நடத்தி எச்சரிக்கை விடுத்துச் சென்றனர். ஆனால் அதை பொருட்படுத்தாமல் வியாபாரிகள் மீண்டும் அவ்வாறே செய்து வரும் நிலையில், இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் அபராதம் விதித்து வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்