மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்து அவதூறு கருத்தை வெளியிட்ட வழக்கில் பாஜக மாநில செயலாளர் SG சூர்யாவிற்கு 30 நாட்கள் சைபர் கிரைம் காவல்நிலையத்தில் கையெழுத்து இட வேண்டும் என்ற நிபந்தனை ஜாமினை, மதுரை மாவட்ட முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றம் வழங்கியது. இதையடுத்து கடந்த 12 நாட்களாக சூர்யா காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக கையெழுத்து இட வர முடியவில்லை எனவும், ஜாமினில் நிபந்தனையை தளர்த்த கோரியும், நிபந்தனை கையெழுத்தை சென்னைக்கு இட மாற்றம் செய்ய கோரியும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.