சென்னையில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, 13 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைதுசெய்யப்பட்டார்.
சென்னை சூளைமேட்டை சேர்ந்த பெண் ஒருவர், எட்டாம் வகுப்பு பயிலும் தனது 13 வயது சிறுமியை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, சிறுமியின் செல்போன் சிக்னலை வைத்து தேடிய போலீசார், மாமல்லபுரம் பகுதியில் இருப்பதை கண்டுபிடித்தனர்.
அங்கு சென்று, விடுதிகளை சோதனை செய்த போது, இளைஞர் ஒருவர் கடத்திச் சென்றது தெரிய வந்தது. போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயன்ற இளைஞரை கைது செய்தனர்.
விசாரணையில், செங்கல்பட்டை சேர்ந்த துளசிதரன் என்பதும், இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு வருடமாக பழகி, மாமல்லபுரத்திற்கு வரவழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, கடத்தல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.