நாகையை உலுக்கிய பரபரப்பு சம்பவம் | ரவுடி கோஷ்டிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறு

Update: 2022-12-11 10:48 GMT
  • whatsapp icon

பிரபல ரவுடி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளிகளை போலீஸார் கைது செய்தனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் சிவபாண்டி என்பவர் மீது பல வழக்குகள் நிலுவையில் இருந்தது. இந்நிலையில், கடந்த 8-ஆம் தேதி சிவபாண்டியை, அபிராமி அம்மன் திருவாசல் அருகே ஒரு கும்பல் வெட்டிப் படுகொலை செய்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கிருபாகரன், தீபன்ராஜ், சேத்தப்பா, நல்லியான், சுபாஷ் ஆகியோரை கைது செய்தனர். இதனிடையே, இந்த கொலையில் சம்பந்தப்பட்ட முனீஸ், அந்தோணி ஆகியோர் போலீஸில் சரணடைந்தனர். முதற்கட்ட விசாரணையில், இரண்டு ரவுடி கோஷ்டிகளுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் கொலை நடந்ததாகக் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்