இந்தியாவிற்கு ஆங்கிலேயரிடமிருந்து அதிகார மாற்றத்திற்கான அடையாளமாக செங்கோல் வழங்கப்பட்டதற்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை என, காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது...இந்தியா விடுதலை அடைந்தபோது, ஆட்சி மாற்றத்தின் அடையாளத்தை குறிக்கும் வகையில், தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டு ஜவஹர்லால் நேருவிடம் வழங்கப்பட்ட செங்கோல், புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ், 1947ம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாணத்தில் தயாரிக்கப்பட்ட செங்கோலானது, சில மத அமைப்புகளால் ஜவஹர்லால் நேருவுக்கு வழங்கப்பட்டது உண்மைதான் எனவும், ஆனால் ஆங்கிலேயரிடமிருந்து ஆட்சி மாற்றத்தின் அடையாளமாக செங்கோல் வழங்கப்பட்டதற்கான எந்தவித ஆவணப்பூர்வமான ஆதாரங்களும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த செங்கோலானது பிரதமர் மோடி மற்றும் அவரது ஆதரவாளர்களால், அரசியல் ஆதாயங்களுக்காக தற்போது பயன்படுத்தப்படுவதாக விமர்சித்தார்.