தரமணி திருவேங்கடம் நகரில் இளைஞர்கள் தங்கியுள்ள ஒரு விடுதிக்கு 2 நாள்களுக்கு முன்பு சென்ற அந்த நபர், அதே விடுதியில் தங்கியிருப்பதாகவும், தனது செல்போன் செயலி பழுதானதால், உடல் நலம் சரியில்லாமல் ஊரில் இருக்கும் தனது தாய்க்கு பணம் அனுப்ப முடியவில்லை என்றும் கூறி பணம் கேட்டுள்ளார்.
அவருடைய பேச்சை நம்பி, அவருடைய வங்கிக் கணக்கிற்கு 33 ஆயிரம் ரூபாய் அனுப்பி உள்ளனர்.
வெளியே சென்ற அந்த நபர் நீண்ட நேரமாகியும் வராததால், விசாரித்தபோது, அவர் அந்த விடுதியில் தங்கவில்லை என்பது தெரியவந்தது.
இந்த விஷயம் மற்ற விடுதிகளில் தங்கி உள்ளவர்களுக்குத் தெரிய வந்ததால் அவர்கள் எச்சரிக்கையாக இருந்தனர்.
இந்நிலையில், மற்றொரு விடுதிக்குச் சென்று பணம் பறிக்க முயன்றபோது, அவரை தரமணி போலீசாரிடம் அங்கு தங்கியிருக்கும் இளைஞர்கள் பிடித்துக் கொடுத்தனர்.
விசாரணையில் அவர், பீகார் மாநிலத்தை சேர்ந்த சச்சின் குமார் என்பது தெரியவந்தது.
அவரிடம் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.