சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில்ஆசிரியர் நியமன முறைகேடு குறித்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த விசாரணை குழு அமைக்கப்பட்டது.
இது குறித்து உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் அரசாணை வெளியிட்டு இருந்த நிலையில், இன்று காலை முதல் அங்கு விசாரணை துவங்கியுள்ளது.
அந்த பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு மற்றும் ஊழல் நடைபெறுவதாக பல புகார்கள் பெறப்பட்டன.
இதனையடுத்து புகாரை விசாரிக்க, அரசு நியமித்த இரண்டு பேர் கொண்ட குழு, இன்று பல்கலைக்கழகம் வந்தது. அப்போது, பல்கலைக்கழகம் வந்த அதிகாரிகள், முதற்கட்டமாக ஆவணங்களை ஆய்வு செய்தனர்.