"வன்முறையால் உருக்குலைந்த பள்ளி... 4,000 மாணவர்களின் எதிர்காலம் என்ன?" - தனியார் பள்ளிகள் சங்கம் கேள்வி

Update: 2022-07-18 02:46 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தீக்கிரையான பள்ளியில் படித்த நான்காயிரத்திற்கும் அதிகமான மாணவர்களின் எதிர்காலம் என்ன என்று , பல்வேறு சங்க நிர்வாகிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். இது குறித்து தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் சங்க பொதுச் செயலாளர் நந்தகுமார், தனியார் பள்ளிகளுக்கு பாதுகாப்பு கேட்டும், பாதிக்கப்பட்ட பள்ளிக்கு நிவாரணம் வழங்க கோரியும் நாளை முதல் பள்ளிகள் இயங்காது என்று தெரிவித்திருந்தார். மேலும் தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் ராஜா, ஆசிரியர்கள் கருப்புப் பட்டை அணிந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மனு கொடுப்பார்கள் என தெரிவித்துள்ளார். மேலும் இதுக்குறித்து கருத்து தெரிவித்துள்ள அகில இந்திய நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் பள்ளியின் சங்க பொதுச்செயலாளர் பாட்சா, பாதிக்கப்பட்ட பள்ளிக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும், மாணவியின் மரணத்தில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்