ஆளும் கட்சியை எச்சரித்த எஸ்.ஜி.சூர்யா..நீதிமன்ற உத்தரவால் சிரித்தபடி கை ஆட்டிக்கொண்டே வந்த காட்சி

Update: 2023-06-21 03:11 GMT

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்தும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குறித்தும் ட்விட்டர் பக்கத்தில் அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாக எஸ்.ஜி. சூர்யா மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மதுரை மாநகர சைபர்கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில், அவரை சென்னையில் கடந்த சனிக்கிழமை போலீசார் கைது செய்த நிலையில், ஜூலை 1-ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். அவரை காவல் துறை விசாரணை கோரிய வழக்கில், மதுரை மாவட்ட முதலாவது நீதிமன்றத்தில் நீதிபதி டீலா பானு முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். எஸ்.ஜி.சூர்யா சார்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டபோது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி டீலாபானு, எஸ்.ஜி.சூர்யாவிற்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து வாகனத்தில் ஏறி புறப்பட்ட எஸ்.ஜி. சூர்யா, ஆளும் கட்சிக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் குரல் எழுப்பியபடி சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்