"ராஜீவ் கொலை வழக்கு தீர்ப்பை போல் என்னையும் விடுதலை செய்யுங்கள்" -சுப்ரீம் கோர்ட் போன கைதி

Update: 2022-11-17 17:19 GMT

மைசூரின் முன்னாள் திவான் சர் மிர்ஸா இஸ்மாயிலின் பேத்தி ஷகீரா சாரதானந்தாவை 1986-ஆம் ஆண்டு 2வது திருமணம் செய்து கொண்டார்.

600 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்காக மனைவி ஷகீராவை மயக்க மருந்து கொடுத்து உயிருடன் புதைத்து கொலை செய்ததாக 1994ம் ஆண்டு சாரதானந்தா கைது செய்து செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு பெல்காம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்ததைப் போல, தன்னையும் விடுதலை செய்யக் கோரி சுவாமி சாரதானந்தா தாக்கல் செய்த மனுவை விரைந்து விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி உள்ளிட்ட 16 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தண்டனை பெற்றவர்களை உச்சநீதிமன்றம் விடுதலை செய்த நிலையில், ஒரு கொலை செய்த மனுதாரரும் விடுவிக்கப்பட வேண்டும் என சுவாமி சாரதானந்தா தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்