தமிழ் வழக்காடு மொழி கோரிக்கை நிராகரிப்பு? "அங்கீகரிக்கப்படாதது மிகவும் வேதனை" - எம்.பி. சு.வெங்கடேசன்
தமிழ் உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகும் கோரிக்கை மீண்டும் நிராகரிக்கப்பட்டிருப்பது வேதனைக்குரியது என மக்களவை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ அளித்த விளக்கத்தை சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டுள்ள அவர், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார் உயர்நீதிமன்றங்களில் இந்தி அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இது நீதித்துறையில் தொடரும் அசமத்துவத்தின் சாட்சியாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.