இராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் கணேசன். இவர் ராமநாதபுரம் வண்டிக்கார தெரு கடைவீதி பகுதியில் பணியில் இருந்துள்ளார் . அப்போது சிறுவன் ஒருவன் போலிசாரை கிண்டல் செய்யும் விதமாக வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், சைபர் கிரைம் போலீசார் இதுக்குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.