- நியாய விலைக்கடைகளில் சிறுதானியங்கள் விற்பனை செய்வதற்காக, நேரடி ராகி கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
- நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு கிலோ ராகிக்கு 35 ரூபாய் 60 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றார்.
- முதற்கட்டமாக விரைவில் தர்மபுரி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள நியாய விலைக்கடைகளில் ராகி மாவு வழங்கப்படும் என்றும், அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.