ரயில் நிலையத்தில் வாங்கிய உணவு...பிரித்து பார்த்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
ரயில் நிலையத்தில் வாங்கிய உணவில் புழு இருப்பதாக கூறி பயணி ஒருவர் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் இருந்து கிளம்பிய ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் மானாமதுரையை சேர்ந்த ராஜவேல் என்பவர் பயணம் செய்துள்ளார். விழுப்புரம் ரயில் நிலையத்தில் ரயில் நின்ற போது அங்கு விற்பனை செய்பவர்களிடம் இருந்து வெஜிடபிள் பிரியாணி பொட்டலம் ஒன்றை அவர் வாங்கியதாக தெரிகிறது. உணவை பிரித்து சாப்பிடும்போது அதில் புழு ஒன்று கிடக்கவே அதிர்ந்து போன அவர், இததை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டார். ரயில் பயணத்தின் போது பயணிகளுக்கு உரிய பாதுகாப்பான உணவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.