ராஜ்யசபா எம்.பி வேட்பாளர்களின் சொத்து விவரம்
தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தலுக்கு மனுத்தாக்கல் செய்துள்ள வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் வெளியாகி உள்ளது.;
திமுக சார்பில் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ள கல்யாணசுந்தரத்தின் பெயரில் 43.46 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துக்கள் மற்றும் 3.46 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக வேட்பாளர் கிரிராஜன் பெயரில் 1.53 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துக்கள் மற்றும் 5.12 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக வேட்பாளர் ராஜேஷ்குமாரின் பெயரில் 17.15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துக்கள் மற்றும் 78.08 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் சார்பாக வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் பெயரில் 135 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துக்களும் 5.83 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பெ்யரில், 8.76 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்து மற்றும்18.45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக வேட்பாளர் தர்மர் பெயரில்14.49 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்து மற்றும் 62.37 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துக்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அனைத்து வேட்பாளர்களும் தங்கள் மனைவி பெயரில் உள்ள சொத்துகள் மற்றும் கடன் விவரங்கள் குறித்தும் தங்கள் வேட்புமனு பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளனர்