"ரஜினிகாந்த் தன் கருத்துக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும்" - ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் இயக்கம்
"ரஜினிகாந்த் தன் கருத்துக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும்" - ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் இயக்கம்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், வருத்தம் தெரிவிக்க வேண்டும் என ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், தூத்துக்குடி கலவரம் பற்றி அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், நொடிக்கு நொடி காவல் துறை தகவல் தெரிவித்ததாக ஒரு நபர் ஆணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறினர்.
மேலும் பொதுமக்கள் தான் காவல்துறையினரை தாக்கியதாக கூறிய நடிகர் ரஜினிகாந்த், வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.