ராஜஸ்தானில் அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கும் துணை முதலமைச்சர் சச்சின் பைலட்டிற்கும் இடையே நீடித்து வந்த பனிப்போர் முடிவுக்கு வந்துள்ளது.
ராஜஸ்தானில் எதிரும் புதிருமாக பயணித்து வந்த அம்மாநில முதலமைச்சர் கெலாட் மற்றும் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் இடையே அதிகார மோதல் நாளுக்கு நாள் தலை தூக்கியது.
இருவரையும் அழைத்து கட்சி மேலிடம் பல கட்ட சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில், ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை வருகின்ற டிசம்பர் 4 ஆம் தேதி ராஜஸ்தானுக்குள் நுழைகிறது.
இதற்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்தவும், ராகுலுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது தொடர்பாகவும் காங்கிரஸ் கட்சி ஆலோசனையில் ஈடுபட்டிருந்தது.
இந்த கூட்டத்தில் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஆகிய இருவரும் கலந்து கொண்டதோடு, இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அதோடு, ராகுல் காந்தி கூறியது போல் தாங்கள் இருவரும் காங்கிரஸ் கட்சியின் சொத்து என கெலாட் தெரிவித்தது, இருவருக்கும் இடையே நீடித்து வந்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.