தேவர் தங்க கவச விவகாரம் - "தீர்ப்புக்கு பின் எங்க முடிவு தெரியும்" - ராஜன் செல்லப்பா பரபரப்பு பேட்டி
முத்துராமலிங்க தேவர் தங்க கவச விவகாரத்தில் உயர்நீதிமன்ற ஆணைக்குப் பின் கழகத்தின் செயல்பாடு குறித்து தெரிவிப்போம் என சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் அமைந்திருக்கும் மருது சகோதரர்களின் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, முத்துராமலிங்க தேவர் தங்க கவசம் விவகாரம் தொடர்பான கேள்விக்கு அவர் பதிலளித்தார்.