லாலு பிரசாத் யாதவ் குடும்பம் மீது CBI குற்றப்பத்திரிகை தாக்கல்

Update: 2023-07-04 06:31 GMT

ரயில்வே வேலை முறைகேடு தொடர்பாக ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத், பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட 17 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது

கடந்த 2004 முதல்வர் 2009-ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் கூட்டணி அரசில், ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் பதவி வகித்தபோது, நிலத்தை லஞ்சமாக பெற்றுக் கொண்டு ரயில்வேயில் வேலை அளித்ததாக சிபிஐ கடந்த 2022-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக, லாலு பிரசாத் யாதவ், அவருடைய மனைவி ராப்ரி தேவி, மகள் மிசா பாரதி உள்ளிட்ட 16 பேருக்கு

எதிராக சிபிஐ ஏற்கெனவே கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்நிலையில், லாலு பிரசாத், அவரது மனைவி ராப்ரிதேவி, அவரது மகனும் பீகாரின் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட 17 பேருக்கு எதிராக 2-ஆவது குற்றப் பத்திரிக்கையை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்