சாவர்க்கர் பற்றி ராகுல் பேச்சு... - மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பு | Savarkar | Rahulgandhi

Update: 2022-11-18 02:19 GMT

இந்துத்துவ மூலவர்களில் ஒருவரான வீ.டி.சாவர்க்கர் குறித்து ராகுல்காந்தி பேசியது மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய ஒற்றுமைப் பயணம் மேற்கொண்டுவரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, மகாராஷ்டிரத்தில் இப்போது யாத்திரையில் ஈடுபட்டுள்ளார். கடந்த வாரம் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரேவும் இதில் கலந்துகொண்டார்.

அதை முன்னிட்டு உத்தவ் தாக்கரே சிவசேனா மீது, மகாராஷ்டிர முதலமைச்சர் ஷிண்டேவின் போட்டி சிவசேனாவும் பாஜகவும் விமர்சனம் வைத்துவருகின்றன.

இந்த சூழலில், பாஜகவின் மூல அமைப்பான சங்பரிவாரின் மதிப்பிற்குரிய வீ.டி.சாவர்க்கர் குறித்து ராகுல்காந்தி விமர்சனம் செய்தார்.

பிரிட்டீஷ் ஆதிக்கத்தின்போது சிறைப்பட்ட சாவர்க்கர், விடுதலை ஆவதற்காக, மன்னிப்புக் கடிதம் எழுதித் தந்தார் என்றும்,

சுதந்திரப்போராட்ட காலத்தில் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, வல்லபபாய் பட்டேல் ஆகியோர் நீண்ட காலம் சிறையில் இருந்தனர் என்றும்,

அவர்கள் ஒருபோதும் சாவர்க்கரைப் போல மன்னிப்புக் கடிதம் அளிக்கவில்லை என்றும் ராகுல் குறிப்பிட்டார்.

ராகுலின் இந்தப் பேச்சைப் பிடித்துக்கொண்ட போட்டி சிவசேனா, பாஜக கட்சிகள், உத்தவ் தாக்கரே தரப்பை மேலும் விமர்சித்து வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்