உல்லாசத்திற்கு பணம் கேட்டதால் ஆத்திரம்...பாலியல் தொழிலாளி கழுத்தை நெரித்து கொலை.

Update: 2023-07-11 17:12 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளது பர்கூர் காவல் நிலையம். போலீசார் அதிகாலையில் பரபரப்பாக வாகனத்தில் ஏற்றும் இந்த நபர்கள், நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து செல்லப்படும் கொடூரமான கொலை குற்றவாளிகள். உற்றார் உறவினர்களின் ஆறுதலுக்கு அடங்காமல் அழுகையோடு நிற்கதியாய் நிற்கும் இந்த சிறுமியின் தாய் தான் கொல்லப்பட்டிருக்கிறார். கொல்லப்பட்டவர் கிருஷ்ணகிரி மாவட்டம் குண்டியல்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த அம்பிகா. 40 வயதான அம்பிகா ஒரு சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றிருக்கிறார் ஆனால் அதன் பிறகு அவர் திரும்பி வரவே இல்லை. குண்டியல்நத்தம் வனப்பகுதிகுக்குள் மேய்ச்சலுக்கு சென்றிருந்த ஊர் மக்கள் அம்பிகா சடலமாக கிடப்பதை பார்த்து, பதறிப்போய் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.நடந்திருப்பது கொலை தான் என்பதை உறுதி செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியிருக்கிறார்கள்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சம்பவ நாளன்று வீட்டை விட்டு வெளியேறிய அம்பிகாவின் செல் போன் சிக்னலை ஆய்வு செய்திருக்கிறார்கள். வனப்பகுதிக்கு அருகில் அவரது போன் ஸ்விட்ச் ஆப் ஆகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. உடனே சம்பவ இடத்தை சல்லடை போட்டு சலித்த போலீசார், அம்பிகாவின் செல்போனை கண்டு பிடித்திருக்கிறார்கள். அதன் பிறகு தான் விசாரணை வேகமெடுத்திருக்கிறது. அம்பிகாவின் செல் போன் அழைப்பு விவரத்தை அலசி எடுத்த காவல்துறையினர், அவர் கடைசியாக, திருப்பத்தூர் மாவட்டம் பந்தாரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த, ஏழுமலை என்பவரிடம் பேசியிருப்பதை கண்டுபிடித்து இருக்கிறார்கள். மேலும் ஏழுமலை அடிக்கடி அம்பிகாவை தொடர் கொண்டு பேசி இருப்பதும் தெரிய வந்திருக்கிறது.

உடனே போலீசார் ஏழுமலையை தேடி பிடித்து விசாரித்திருக்கிறார்கள். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. 20 வருடங்களுக்கு முன் கனவரை இழந்த அம்பிகா, தன் மகளை வளர்க்க வறுமை காரணமாக பாலியல் தொழில் செய்து வந்திருக்கிறார். ஏழுமலை அம்பிகாவின் ரெகுலர் கஸ்டமர். சம்பவ நாளன்று நண்பர்களுடன் மது போதையில் இருந்த ஏழுமலை, அம்பிகாவிற்கு போன் செய்து உல்லாசத்திற்கு அழைத்திருக்கிறார். ஏழுமலை வழக்கமான வாடிக்கையாளர் என்பதால் உல்லாசத்திற்கு சம்மதித்த அம்பிகா, தனக்கும் மது வாங்கி வைக்கும் படி கூறி வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். ஏழுமலை அவரது இரண்டு நண்பர்களை அம்பிகாவுக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். நால்வரும் மது குடித்திருக்கிறார்கள். பிறகு உல்லாசமாக இருந்துள்ளனர். தங்கள் வேலை முடிந்தது இடத்தை விட்டு கிளம்பிய ஏழுமலையிடம், அம்பிகா பணம் கேட்டிருக்கிறார்.மது போதையிலிருந்த ஏழுமலை பணம் தர மறுத்து அம்பிகாவுடன் வாக்குவாததில் ஈடுபட, வாக்குவாதம் முற்றி கைகலப்பு வரை சென்றிருக்கிறது.

இதனால் ஆத்திரமடைந்த ஏழுமலை தன் நண்பர்களுடன் சேர்ந்து அம்பிகாவின் சேலையால் அவரது கழுத்தை நெறித்து கொன்றுவிட்டு தப்பி சென்றிருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த பர்கூர் காவல் நிலைய போலீசார் ஏழுமலையுடன் சேர்த்து அவரது நண்பர்களையும் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்