இங்கிலாந்து அரசி 2ம் எலிசபெத் காலமான நிலையில் உலக அதிசயங்களுள் ஒன்றான ஈபிள் கோபுரத்தில் விளக்குகள் அணைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. 2ம் எலிசபெத்தின் மறைவுக்கு உலகம் முழுவதும் தலைவர்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் பிரான்ஸ் நாட்டின் அடையாளமாக விளங்கும் ஈபிள் டவரில் நள்ளிரவில் விளக்குகள் அணைக்கப்பட்டு அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.