ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கு..இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தனது தாய் குறித்து பேசிய மன்னர் சார்லஸ்

Update: 2022-09-13 05:07 GMT

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின், இறுதிச் சடங்குகள் வரும் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ராணி எலிசபெத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் புதிய மன்னர் மூன்றாம் சார்லஸ் பங்கேற்றார்.

இதனை தொடர்ந்து நடைபெறும், பாரம்பரிய சடங்கு நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொள்கிறார்.

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மன்னர் சார்லஸ், தமது தாய் எலிசபெத் கடந்து வந்த பாதையை பின்பற்றி, ஜனநாயகத்தை உயிர் மூச்சாக கருதி செயல்படுவேன் என்றார்.

எலிசபெத் இளம் வயதில் ராணியாக பொறுப்பேற்று நாட்டிற்கு சேவை செய்ததாகவும், பாரம்பரிய கொள்கைகளை காப்பாற்றி வந்ததாகவும், சார்லஸ் புகழாரம் சூட்டினார்.

தன்னலம் அற்ற சேவை, கடமை உணர்வுக்கு உதாரணமாக ராணி எலிசபெத் திகழ்ந்ததாகவும் மன்னர் சார்லஸ் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்