முடிகிறதா போர்? - புதின் மறைமுக அறிவிப்பு
உக்ரைன் - ரஷ்ய போரை முடிவுக்குக் கொண்டு வரவே விரும்புவதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தை குறித்து ரஷ்யாவின் அழைப்புகளை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நிராகரித்து வருவதாக ரஷ்யா முன்னரே குற்றம் சாட்டி இருந்தது... உக்ரைனும் அமெரிக்காவும் ரஷ்யாவின் கருத்துக்களுக்கு செவி மடுப்பதில்லை எனவும், ரஷ்யாவை பலவீனப்படுத்த அமெரிக்கா உக்ரைனை ஒரு போர்க்களமாக பயன்படுத்துவதாகவும் ரஷ்யா குற்றம் சாட்டி இருந்தது... போரை விரைவாக முடிவுக்குக் கொண்டு வரவே ரஷ்யா விரும்புவதாக தெரிவித்த புதின், போரை நிறைவு செய்வதே தங்கள் இலக்கு எனவும் தெரிவித்தார். எல்லா பிரச்சினைகளும் ஏதோ ஒரு விதத்தில் பேச்சு வார்த்தைகளுடன் முடிவடையும் என்று தெரிவித்த புதின், உக்ரைன் அதிகாரிகள் எவ்வளவு வேகமாக புரிந்து கொள்கிறார்களோ அவ்வளவு நல்லது எனவும் அழுத்திக் கூறியுள்ளார்.