வாடிக்கையாளர்கள் தலையில் மிளகாய் அரைத்த பிரபல வங்கி மேனேஜர் - லட்சம் லட்சமாக கடன் வாங்கி உல்லாசம்
- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் வாடிக்கையாளர்களின் பெயரில் போலியாக கடன் பெற்று, 28 லட்சம் மோசடி செய்த இந்தியன் வங்கி மேலாளரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை புதுநகர் பகுதியில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் சரவணன் என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.
- இவர் வாடிக்கையாளர்களின் பெயரில் போலியாக கால்நடை கடன், கரும்பு பயிர் கடன், சேமிப்பு கடன் உள்ளிட்ட கடன்களை வழங்கி அதனை சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் பண பரிமாற்றம் செய்து மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.
- இது குறித்து விசாரணையில், மேலாளர் சரவணன் கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு வரை 4 ஆண்டுகளில் 28 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது.
- வழக்கு பதிவு செய்த மாவட்ட குற்றப் தடுப்பு பிரிவு போலீசார், மோசடி செய்த சரவணனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.