இறந்தவரின் உடலை சாலையில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் - ஸ்தம்பித்த திருப்பதி-சென்னை சாலை
திருவள்ளூரை அடுத்த அரண்வாயில்குப்பத்தில், சுடுகாட்டுக்குச் செல்லும் பாதையை சிலர் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருப்பதாக கூறி, இறந்தவரின் உடலை சாலையில் வைத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சுடுகாட்டுப் பாதை ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள்.
இதனால், சென்னை-திருப்பதி சாலையில் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் நின்றதால், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது