எகிப்திற்கு பிரதமர் மோடி சுற்று பயணம் - கொண்டாடி தீர்த்த இந்திய வம்சாவளியினர்

Update: 2023-06-25 02:11 GMT

எகிப்து தலைநகரான கெய்ரோ விமானநிலையம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை, எகிப்து பிரதமர் முஷ்தபா மட்டவுலி நேரில் சென்று வரவேற்றார். பின்னர் நட்சத்திர ஓட்டலுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு, இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். வந்தே மாதரம் என்றும், மோடி மோடி என்றும் முழக்கங்களை எழுப்பினர். பலர் இந்திய திரைப்பட பாடல்களை பாடியும், கலாசார நிகழ்ச்சிகளை வழங்கியும் அவரை வரவேற்றனர். அவர்களை பிரதமர் மோடி வாழ்த்தியதுடன், அவர்களுடன் சிறிது நேரம் உரையாடினார்.

Tags:    

மேலும் செய்திகள்