குஜராத்தில் சாலை மார்க்கமாக காரில் சென்ற பிரதமர் மோடி, சாலையின் இருபுறமும் நின்றுக் கொண்டிருந்த பொதுமக்களுக்கு கைகளை அசைத்தபடியே சென்றார். அப்போது ஒரு சிறுமி, கையில் ஓவியத்துடன் நிற்பதை கவனித்த பிரதமர் மோடி, பாதுகாவலர்களிடம் ஓவியத்தை வாங்கி வரும்படி உத்தரவிட்டார். இதையடுத்து சிறுமியிடம் இருந்து ஓவியத்தை பெற்றுக்கொண்ட பாதுகாவலர்கள், அதனை பிரதமர் மோடியிடம் அளித்தனர். சாலையோரம் நின்றிருந்த என்னை கவனித்து, அவருக்காக வைத்திருந்த ஓவியத்தை வாங்கிக் கொண்டது மிகவும் பெருமையாக உள்ளதாக, குஜராத் மாநிலம், வாபி நகரை சேர்ந்த 13வயது சிறுமி தெரிவித்தார்.