பத்திரிகையாளர் நல வாரியத்தின் 2-வது கூட்டம்...தினத்தந்தி குழும இயக்குநர் பா.சிவந்தி ஆதித்தன் பங்கேற்பு

செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் கூட்டம் நடைபெற்று வருகிறது. தினத்தந்தி குழும இயக்குநர் பா.சிவந்தி ஆதித்தன் உட்பட அலுவல் சாரா உறுப்பினர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். பத்திரிக்கையாளர்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களை ஒருங்கிணைப்பது, நலவாரிய உதவித்தொகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்குவது, உதவித்தொகைக்கு கேட்டு வந்துள்ள விண்ணப்பங்களை பரிசீலனை செய்வது, பயனாளிகளைத் தேர்வு செய்வது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்படுகிறது. பத்திரிகையாளர் நல வாரியத்தின் முதல் கூட்டம் ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, வாரிய உறுப்பினர்களுக்கான திருமண உதவி தொகையை 2 ஆயிரம் ரூபாயில் இருந்து, 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி அளிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.