குறை மாதத்தில் பிறந்த குழந்தை.. அண்ணன் மனைவி மீது தாய் புகார் - சென்னை போலீஸ் கையில் விசித்திர கேஸ்

Update: 2023-02-06 08:24 GMT

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில், குறை மாதத்தில் பிறந்த குழந்தை இறந்தது தொடர்பாக, பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

பழைய வண்ணாரப்பேட்டையில் வசித்து வரும் கௌசல்யா என்பவருக்கு, கடந்த மாதம் 23ஆம் தேதி குழந்தை பிறந்து இறந்தது.

சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பிய கௌசல்யா, தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதில், தனது சகோதரர் விஜயசிம்மன், அவரது மனைவி துர்காபாய் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிறந்து வாழ்வதாகவும், இது தொடர்பான வாக்குவாதத்தில் துர்காபாய் தன்னை கீழே தள்ளியதாகவும் குறிப்பிட்டார்.

அப்போது, தான் கர்ப்பிணியாக இருந்த நிலையில், குறை பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்து சில நிமிடங்களிலேயே இறந்ததாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், துர்காபாயை கைது செய்து சிறையில் அடைந்தனர்.

மேலும், தலைமறைவாக உள்ள துர்காபாயின் தோழிகள் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்